சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
விஜய் டி.வி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்களில் முக்கியமானவர்கள் ஹரிஸ் கல்யானும், ரைசாவும். இவர்கள் இருவரும் இப்போது பியார் பிரேமா காதல் என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இளன் இயக்கும் இந்தப் படத்தை கே.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். அவரே இசை அமைக்கவும் செய்கிறார்.
ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்கிறார். ரைசா ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது. இதற்கு முன் ஹீரோயின் தோழியாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி, கணிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
படத்தை தயாரிப்பது பற்றி யுவன் சங்கர் ராஜா கூறியதாவது: ஒரு படத்தை தயாரிக்கும் பொழுது கிடைக்கும் உற்சாகம் அளவற்றது. நல்ல கூட்டணி, நல்ல கதை, நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள், முன்னேறி வரும் பிரபல நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சங்கமம் இப்படத்தயாரிப்பை மேலும் சிறப்பாக்கியுள்ளது. வெளிவராத திறமைகளை வெளிக்கொண்டு வந்து, உலகிற்கு காண்பிப்பதே எனது மற்றும் கே.புரொடக்ஷன் ராஜா ராஜன் அவர்களின் நோக்கம். என்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.