ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை நயன்தாரா இன்று அவருடைய 34வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவர் நடித்து ஒரு வாரம் முன்னர் வெளிவந்த 'அறம்' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரை சமூக வலைத்தளங்களில் 'லேடி சூப்பர் ஸ்டார்' எனக் குறிப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். இன்று கூட டுவிட்டர் வலைத்தளத்தில் 'நயன்தாரா' என்பதை விட '#HBDLadySuperStarNayanthara என்பதுதான் டிரென்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் இதற்கு முன் விஜயசாந்தியைத்தான் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைத்தார்கள். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாராவை அப்படி அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நம்பர் 1 நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார் நயன்தாரா.
தற்போது அவர் 'வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ' ஆகிய தமிழ்ப் படங்களிலும், 'சை ரா, ஜெய் சிம்ஹா' ஆகிய தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். இப்போதும் அவரை நாயகியாக நடிக்க வைக்க பலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 2018-லும் நயன்தாராதான் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.