தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்தியத் திரையுலகில் ஒரு ஹீரோவின் இமேஜ் என்பது தற்போது அவர்களுடைய சமூக வலைத்தள தாக்கத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது. அதிலும், யு டியூப்பில் அவர்கள் படங்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் எவ்வளவு பார்வைகளைப் பெறுகின்றன என்பது பற்றி தமிழ், தெலுங்கில் உள்ள ஹீரோக்களின் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். அதில் ஒரு புதிய சாதனை என்றால் கூட கொண்டாடித் தீர்த்துவிடுகிறார்கள்.
டீசரைப் பொறுத்தவரையில் தற்போது விஜய் நடித்து வெளிவந்த 'மெர்சல்' டீசர் 10 மில்லியன் லைக்குகள் பெற்று தனி சாதனை புரிந்துள்ளது. இருந்தாலும் பார்வைகள் எண்ணிக்கையில் 'கபாலி' டீசரின் சாதனையை இன்னும் முறியடிக்க முடியவில்லை.
தென்னிந்திய ஹீரோக்களின் பெரும்பாலான படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியூபில் வெளியாகின்றன. அதில் தற்போது தெலுங்கின் இளம் ஹீரோவான அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'சர்ரைனோடு' திரைப்படம் 100 மில்லியன், அதாவது 10 கோடி பார்களைப் பெற்று பெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்ட ஒரு படம் இவ்வளவு பார்வைகளைப் பெறுவது இதுவே முதல் முறை.
தமிழில் விஜய் நடித்து வெளிவந்த 'தெறி' ஹிந்தி யு டியூபில் 3 கோடியே 96 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அஜித் நடித்து வெளிவந்த 'வேதாளம்' 1 கோடியே 72 லட்சம் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. டீசரில் சாதனை படைக்கும் அஜித், விஜய்யின் படங்களை முழு படத்தில் முந்தி தனி சாதனை படைத்துள்ளார் அல்லு அர்ஜுன்.