‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான படம் பறவ. புறா பந்தயத்தை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியிருந்தது. இந்தப்படத்தில் துல்கர் தான் ஹீரோ என சொல்ல முடியாவிட்டாலும், படம் முழுவதும் வரும் வகையில் நீட்டிக்கப்பட்ட ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் துல்கர். 'பிரேமம்' புகழ் காமெடி நடிகரான சௌபின் சாஹிர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இதற்குப்பின் வெளியான துல்கரின் 'சோலோ' படம் சில நாட்களிலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், 'பறவ' படம் ஐம்பது நாட்களை கடந்து இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. எப்படியும் 75வது நாளை தொட்டுவிடும் என இப்போதே போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர்.