விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
டாக்டர் ராஜசேகர் நடித்த 'பி.எஸ்.வி கருட வேகா' படம் கடந்த நவ-3ஆம் தேதி வெளியானது. படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாக போனதால் போட்ட காசை எடுக்க முடியுமா என்கிற டென்சனில் இருந்தார் ராஜசேகர். அதன்பின் சாட்டிலைட் ரைட்ஸ் 4.10 கோடி ரூபாய்க்கு விலைபோன பின்னும் நட்டக்கணக்கின் சதீவீதம் குறைந்ததே தவிர முழுதாக தீரவில்லை.
இந்தநிலையில் படம் ரிலீசானபின் அதற்கு கிடைத்த வரவேற்பால் அதை ஹிந்தியில் டப்பிங் செய்வதற்கான ரைட்ஸை தேடிவந்து வாங்கிப் போயிருக்கிறார்களாம். இதனால் போட்ட முதல் கைக்கு கிடைப்பதுடன் ஓரளவு லாபமும் நிற்கும் என வினியோகஸ்தர்கள் தரப்பில் பேசிக்கொள்ளப்படுகிறது.