Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிகாந்த் தருவாரா...? - தமிழ் ஆர்வலர்கள் ஆர்வம்

17 நவ, 2017 - 16:29 IST
எழுத்தின் அளவு:
Did-Rajinikanth-donate-for-Harvard-Tamil-Chaiir?

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல்ஹாசன் நேற்று 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார். அவருக்கு முன்பே நடிகர் விஷால் 10 லட்ச ரூபாயும், நடிகர் கருணாஸ் 1 லட்ச ரூபாயும் வழங்கினார்கள். நடிகர் ஜி.வி.பிரகாஷ் எவ்வளவு தொகை எனத் தெரிவிக்காமல் நன்கொடை வழங்கினார். சூர்யா நன்கொடை தருவதாகத் தெரிவித்துள்ளார், ஆனால், பணத்தை வழங்கினாரா என்பது குறித்து தகவல் இல்லை.

தங்கள் படங்களிலும், வசனங்களிலும் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் வாழ்கிறோம் என முழக்கமிடும் மேலும் சில நடிகர்கள் இதற்காக நன்கொடை தருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் இருக்கை அமைய வேண்டும் எனப் பாடுபடும் தமிழ் ஆர்வலர்கள் இது குறித்து பல நடிகர்களுக்கும் தகவல்களை அளித்து வருகின்றனர்.

'படையப்பா' படத்தில் வைரமுத்து எழுதி ரஜினிகாந்த் பெருமையாகப் பாடிய 'என் பேரு படையப்பா...' பாடலில்,
“என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா...
என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா”... எனப் பாடியுள்ளார்.

தமிழுக்காக உடல், பொருள், ஆவியைக் கொடுப்பேன் என்று பாடி ரசிகர்களைச் சேர்த்த ரஜினிகாந்த், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக எவ்வளவு பொருள் கொடுப்பார் என சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.

மாத சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் பலரும் அதற்காக நன்கொடைகள் தரும் போது, 'தமிழ், தமிழர்கள்' என முழக்கமிடும் மற்ற நடிகர்களும் இதற்காக ஏதாவது செய்வார்களா என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in