இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சல்மான் கான் நடிப்பில் தபாங், தபாங்-2 படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. தபாங் 3 படம் உருவாக இருப்பதாக ஒன்றரை ஆண்டுகளாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் சல்மான் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருப்பதால் இந்தப்படம் தள்ளிப்போய் கொண்டே வந்தது.
தபாங் 2 படத்தை போலவே தபாங் 3-யையும் சல்மானின் சகோதரர் அர்பாஸ் கான் தான் இயக்குவதாக முதலில் செய்தி வந்தது. ஆனால் அதன்பின்னர் பிரபுதேவா இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வந்தது. ஆனால் அது உறுதியாகமால் இருந்தது. இப்போது தபாங் 3-யை சல்மான் இயக்குவது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து அர்பாஸ் கான் கூறுகையில், தபாங் 3 படத்தை பிரபுதேவா இயக்குகிறார். கடந்தவாரம் தான் இதுதொடர்பாக அவரிடம் பேசினேன். 2018, ஏப்ரல் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதற்கு முன்னதாக படத்தின் பீரி புரொடக்ஷ்ன் வேலைகள் ஆரம்பமாக உள்ளது. ஒரே நேரத்தில் சல்மான் ரேஸ் 3 மற்றும் தபாங் 3 படத்தில் நடிக்க உள்ளார் என்றார்.