கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தற்போது அண்ணாதுரை, காளி என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இதில் அண்ணாதுரை படத்தை ஸ்ரீனிவாசனும், காளி படத்தை கிருத்திகா உதயநிதியும் இயக்கியுள்ளார்கள். அண்ணாதுரை நவம்பர் 30-ந்தேதி வெளியாவதை அடுத்து காளி படமும் விரைவில் திரைக்கு வருகிறது.
அண்ணாதுரை படத்தின் ஆடியோ விழாவில் உதயநிதி ஸ்டாலினும், கிருத்திகா உதயநிதியும் கலந்து கொண்டனர். அப்போது உதயநிதி பேசும்போது, நான் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்பு டிரைலரை வெளியிடவே கதை லீக் ஆகி விடுமோ என்று பயப்படுவோம். ஆனால் விஜய் ஆண்டனியோ படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் பத்து நிமிட காட்சிகளை திரையிட்டு காட்டுகிறார். இது அவரது தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. இந்த படத்தின் பாடலில் ஜிஎஸ்டி என்ற வார்த்தையை இடம்பெறச் செய்து பின்னர் நீக்கியிருக்கிறார்கள். இதனால் விஜய் ஆண்டனி வீட்டிற்கு ஐடி ரெய்டு வர வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருங்கள் என்று எச்சரித்தார் உதயநிதி.