'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் வெற்றியடைந்த புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன், அடுத்து இயக்கி வரும் புதிய படம் 'நரகாசுரன்'. இயக்குநர் கௌதம் மேனன் தயாரிப்பில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில் அர்விந்த் சாமி, சந்தீப் கிஷன், மலையாள ஹீரோ இந்திரஜித் சுகுமாரன் மூவரும் ஹீரோவாக நடிக்க, ஸ்ரேயா, 'மீசைய முறுக்கு' ஆத்மிகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
'மாயா' புகழ் ரான் எத்தன் யோஹான் 'நரகாசுரன்' படத்திற்கு இசையமைக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்கிறார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை 40 நாட்களில் முடிக்க கௌதம் மேனன் திட்டமிட்டிருந்தாராம். திட்டமிட்டதற்கு ஒரு நாள் கூடுதலாக 41 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன்.