சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பர் ராஜா தயாரிப்பில் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னரே டிசம்பர் மாதம் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு வேலைக்காரன் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கி நடைபெற்றது
இதில் சிவகார்த்திகேயன், ஆர்.ஜே.பாலாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கப்பட்டதை அடுத்து, ராஜஸ்தானில் இறைவா பாடலின் படப்பிடிப்பும் நடைபெற்றது. மேலும், சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி பங்கேற்ற இறுதிக்காட்சியும் படமாக்கப்பட்டது.
தற்போது டிசம்பர் 22-ம் தேதி வேலைக்காரன் வெளியீடு என்பதால், இறுதிக்கட்டப் பணிகளையும் துரிதப்படுத்தி இருக்கிறார்கள். பட பணிகள் இன்னும் முடியவில்லை. எனவே இதுவரை சென்சாருக்கு அப்ளை பண்ணவில்லை.
ஒரு படத்தின் தணிக்கைக்கு 65 நாட்கள் என தணிக்கை வாரியம் காலம் நிர்ணயித்துள்ளது. டிசம்பர் 22 ஆம் தேதிக்கு இன்னும் 37 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் வேலைக்காரன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.