‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
மம்முட்டி நடிப்பில் மலையாளம், தமிழ், தெலுங்கு என மும்மொழிகளில் உருவாகியுள்ள படம் தான் 'ஸ்ட்ரீட்லைட்ஸ்'. கமலின் 'உத்தம வில்லன்', 'விஸ்வரூபம்-2' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷாம்தத் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் மும்மொழிகளில் வெளியாவதாலேயே இதன் ரிலீஸ் தேதியை அறிவிப்பதில் சமீபகாலமாக குழப்பம் நிலவி வந்தது..
தற்போது குழப்பம் நீங்கி, வரும் ஜன-26ஆம் தேதி படம் உறுதியாக ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மம்முட்டி.. க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகி கேரக்டரே கிடையாது. இந்தப்படத்தின் தமிழ் வெர்சனில் மம்முட்டியுடன் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, பிளாக் பாண்டி உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளார்கள்.