'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
கேரளாவை பிறப்பிடமாக கொண்டவர் என்றாலும் தமிழ் இயக்குனராகவே மாறிவிட்டவர் இயக்குனர் கௌதம் மேனன். தனது நடிப்பு பசிக்காக அவ்வப்போது சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்துவரும் கௌதம் மேனன், மலையாளத்தில் முதன்முதலாக 'நாம்' என்கிற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, கொச்சியில் நடைபெற்ற அந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் சமீபத்தில் கலந்துகொண்டார்
அந்த நிகழ்ச்சியில் பேசிய கௌதம் மேனன், மலையாளத்தில் ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற எண்ணம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதாகவும், அதுபற்றி மம்முட்டி, மோகன்லால், நிவின்பாலி, துல்கர் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் அவ்வப்போது பேசி வருவதாகவும் கூறினார்.
மேலும் 2018ல் மலையாளத்தில் படம் இயக்குவது உறுதி என்றும், வரும் ஜனவரி மாதம் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார் கௌதம் மேனன்.