'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரீமேக் தான் தனது சினிமா பயணத்தை இன்றளவும் வெற்றிகரமாக நடத்தி செல்கிறது என திடமாக நம்புகிறார் தெலுங்கு சினிமாவின் விக்டரி வெங்கடேஷ். குறிப்பாக மலையாளத்தில் ஹிட்டடிக்கும் படங்கள் என்றால் அவருக்கு ரொம்பவே குஷி.. அது தமிழிலும் ரீமேக்காகி ஹிட் அடித்துவிட்டால் ரொம்பவே நம்பிக்கையுடன் ரீமேக்கில் இறங்கிவிடுவார்..
பாடிகார்டு, த்ரிஷ்யம் ஆகியவை தெலுங்கில் வெங்கடேஷுக்கு வசூலை வாரிக் குவித்த ரீமேக் படங்கள். கடைசியாக 'இறுதிச்சுற்று' படத்தை ரீமேக் செய்து வெற்றிக்கனியை சுவைத்தார். அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியாகி ஹிட்டான 'தி கிரேட் பாதர்' படத்தை ரீமேக் செய்து நடிக்கும் ஐடியாவில் இருக்கிறாராம் வெங்கடேஷ்.