'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் ஹிந்தி நடிகர் அக்ஷ்ய் குமார். ஜனவரி 25, 2018 அன்று '2.0' படம் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் அக்ஷ்ய்குமார் அவர் நடித்து வரும் ஹிந்திப் படமான 'பேடுமேன்' படம் ஜனவரி 26, 2018 அன்று வெளியாகும் என வெளியீட்டுப் போஸ்டருன் வெளியிட்டார்.
அதனால், '2.0' படம் திட்டமிட்டபடி ஜனவரி 25 அன்று வெளியாகாது என சர்ச்சை எழுந்தது. பின்னர் அது பற்றி பேசிய அக்ஷ்ய் குமார் '2.0' படம் ஜனவரி 25ம் தேதி வெளிவந்தால் 'பேடுமேன்' படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
'2.0' படத்தின் டீசர் வெளியீடு இந்த மாதமும், டிரைலர் வெளியீடு அடுத்த மாதமும் நடக்கும் என்று முன்னர் அறிவித்தபடி நடைபெறாது என்று தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகள் முடிவதற்கே ஏப்ரல், 2018 ஆகும் என்கிறார்கள். இயக்குனர் ஷங்கரும் அவசரகதியில் படத்தைத் தரமில்லாமல் வெளியிடுவதிலும் விருப்பப்படவில்லையாம்.
அதனால், '2.0' படம் ஜுன் மாதத்திற்குப் பிறகே வெளியாகும் என்று தகவல் நேற்றிலிருந்து பரவியது. அதை நிரூபிக்கும் வகையில் அக்ஷ்ய் குமார் இன்று மீண்டும் 'பேடுமேன்' படம் ஜனவரி 26, 2018 அன்று வெளியாகும் என அறிவித்துள்ளார்.
அவர் சொன்னபடி '2.0' படம் வெளிவராததால் தான் அவர் 'பேடுமேன்' பட வெளியீட்டை மீண்டும் உறுதி செய்துள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.