Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பேடுமேன்' ஜனவரி 26 வருவது உறுதி, '2.0' தள்ளிப் போகிறது ?

15 நவ, 2017 - 15:04 IST
எழுத்தின் அளவு:
Akshay-confirms-Padman-releasing-on-Jan-26,-So-2.O-may-postponed?

ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் ஹிந்தி நடிகர் அக்ஷ்ய் குமார். ஜனவரி 25, 2018 அன்று '2.0' படம் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் அக்ஷ்ய்குமார் அவர் நடித்து வரும் ஹிந்திப் படமான 'பேடுமேன்' படம் ஜனவரி 26, 2018 அன்று வெளியாகும் என வெளியீட்டுப் போஸ்டருன் வெளியிட்டார்.

அதனால், '2.0' படம் திட்டமிட்டபடி ஜனவரி 25 அன்று வெளியாகாது என சர்ச்சை எழுந்தது. பின்னர் அது பற்றி பேசிய அக்ஷ்ய் குமார் '2.0' படம் ஜனவரி 25ம் தேதி வெளிவந்தால் 'பேடுமேன்' படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துக் கொள்வதாக அறிவித்தார்.

'2.0' படத்தின் டீசர் வெளியீடு இந்த மாதமும், டிரைலர் வெளியீடு அடுத்த மாதமும் நடக்கும் என்று முன்னர் அறிவித்தபடி நடைபெறாது என்று தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகள் முடிவதற்கே ஏப்ரல், 2018 ஆகும் என்கிறார்கள். இயக்குனர் ஷங்கரும் அவசரகதியில் படத்தைத் தரமில்லாமல் வெளியிடுவதிலும் விருப்பப்படவில்லையாம்.

அதனால், '2.0' படம் ஜுன் மாதத்திற்குப் பிறகே வெளியாகும் என்று தகவல் நேற்றிலிருந்து பரவியது. அதை நிரூபிக்கும் வகையில் அக்ஷ்ய் குமார் இன்று மீண்டும் 'பேடுமேன்' படம் ஜனவரி 26, 2018 அன்று வெளியாகும் என அறிவித்துள்ளார்.

அவர் சொன்னபடி '2.0' படம் வெளிவராததால் தான் அவர் 'பேடுமேன்' பட வெளியீட்டை மீண்டும் உறுதி செய்துள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
சிம்பு, வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை ?சிம்பு, வடிவேலு மீது தயாரிப்பாளர் ... மலையாளத்தில் படம் இயக்கும் கௌதம் மேனன் மலையாளத்தில் படம் இயக்கும் கௌதம் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Dhuruva natchathiram
    Tamil New Film Bhaskar oru Rascal
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Yavanum Puthanillai

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in