மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சமீபத்தில் முடிந்த தீபாவளி தினத்தில் அமீர்கானின், "சீக்ரெட் சூப்பர் ஸ்டார்" படமும், அஜய் தேவ்கனின், "கோல்மால் அகைன்" படமும் மோதின. இதில் அஜய் தேவ்கன் படம் ரூ.300 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்தது. அமீர்கான் படம் பெரிய வெற்றி என்று இல்லாவிட்டாலும் முதலுக்கு மோசம் இல்லாமல் வசூலை குவித்தது.
இந்நிலையில் அடுத்தாண்டு தீபாவளிக்கும் அஜய் - அமீர்கானின் படங்கள் மோத உள்ளன. அமீர்கான், அமிதாப் பச்சன் மற்றும் கத்ரீனா கைப் நடித்து வரும் "தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்" படம், 2018 தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள நிலையில், இந்திர குமார் இயக்கத்தில், அஜய் தேவ்கன், அனில் கபூர் மற்றும் மாதுரி தீட்சித் நடித்து வரும் "டோட்டல் தமால்" படமும் அன்றைய தினம் தான் ரிலீஸாக உள்ளது.