Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு, வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை ?

15 நவ, 2017 - 13:08 IST
எழுத்தின் அளவு:
Producer-council-to-take-action-against-Vadivelu-and-Simbu

விஜய் ஆன்டனி நடித்துள்ள அண்ணாதுரை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(நவ., 15) காலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர்களை நடுத் தெருவில் நிறுத்தியிருக்கும் சில நடிகர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க உள்ளோம் எனப் பேசினார்.

“தயாரிப்பாளர் சங்கத்துல இப்ப புதுசா மூன்று புகார் வந்திருக்கு. எல்லாமே நடிகர்கள் சம்பந்தப்பட்ட புகார். கரெக்டா ஷுட்டிங்குக்கு வரதில்லை. 30 சதவீதம் படம் முடிஞ்சதுமே, இதோ படத்தை ரிலீஸ் பண்ணிக்குங்க, நான் முழுசா படம் முடிச்சிக் கொடுக்க மூணு வருஷம் ஆகும்னு சொல்லி ஒரு படத்தை ரிலீஸ் பண்ண கதை வந்துச்சி. அந்தப் படத்துக்காக 18 கோடி ரூபாய் கடனா கொடுத்திருக்காங்க. அந்த தயாரிப்பாளரோட நிலைமை என்ன ?.

மொத்த விஷயத்தையும் கேள்விப்படும் போது அவ்வளவு சங்கடமா இருக்கு. அந்த பஞ்சாயத்துக்காக அந்த ஹீரோவை சந்திக்க போன போது இரவு 11 மணிக்கு போன எங்களை விடியற்காலைல 5.30 மணிக்குதான் வந்து பார்த்தாரு. மொத்தம் 29 நாள்தான் அவர் ஷுட்டிங் வந்திருக்காரு, அப்படியே வந்த நாட்கள்லயும் 4 மணி நேரம் மேல அவர் இருந்ததில்லை. இப்படி பொறுப்பில்லாம வேறு எந்த நடிகரும் இந்தியாவுல இல்லை.

அடுத்தது நாம எல்லாரும் ரசிக்கக்கூடிய ஒரு காமெடியன் இருக்காரு. அவரைப் பார்த்து சிரிக்கவே முடியாத அளவுக்கு ஒரு தயாரிப்பாளரை காயப்படுத்தியிருக்காரு. நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்துலயும் நான் தலையிட மாட்டேன் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சொல்லிட்டாரு. இப்ப மூணு தயாரிப்பாளர்கள் எங்ககிட்ட வந்திருக்காங்க. கண்டிப்பா அந்த நடிகர்கள் மேல நடவடிக்கை எடுப்போம்,” என தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கே.இ.ஞானவேல்ராஜா தெரிவித்தார்.

கே.ஈ.ஞானவேல்ராஜா தெரிவித்த அந்த ஹீரோர் சிம்பு என்பதும், நகைச்சுவை நடிகர் வடிவேலு என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

சிம்பு நடுத் தெருவில் நிறுத்தியிருக்கும் தயாரிப்பாளர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், வடிவேலு நடுத் தெருவில் நிறுத்தியிருக்கும் தயாரிப்பாளர் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத் தயாரிப்பாளர், இயக்குனர் ஷங்கர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பா.ரஞ்சித், கோபி நயினார் திடீர் சமரசம்?பா.ரஞ்சித், கோபி நயினார் திடீர் ... 'பேடுமேன்' ஜனவரி 26 வருவது உறுதி, '2.0' தள்ளிப் போகிறது ? 'பேடுமேன்' ஜனவரி 26 வருவது உறுதி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Shanu - Mumbai,இந்தியா
15 நவ, 2017 - 18:54 Report Abuse
Shanu ஆணவம் இருந்தால் அழிவு. இளையராஜா மற்றும் வடிவேலுவுக்கு பொருந்தும்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15 நவ, 2017 - 14:56 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மௌனம் காப்பது ஏன்? ஞானவேல் ராஜா அவரக்ளுக்கு வசூல் ஏஜெண்டா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in