இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
'கத்தி, மெட்ராஸ்' படங்களின் கதை விவகாரத்தில் அப்போது மீஞ்சூர் கோபி என்ற பெயர் ரொம்பவே பிரபலம். அந்தப் படங்களின் கதைத் திருட்டிற்காக அவர் அப்போது வழக்கு தொடுத்தார். அது இன்னும் நிலுவையில்தான் இருந்து வருகிறது. அந்த மீஞ்சூர் கோபி தான் கோபி நயினார் என்ற பெயரில் நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார்.
'அறம்' படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். 'மெட்ராஸ்' படத்தை இயக்கிய பா.ரஞ்சித்தும் படம் பற்றிப் பாராட்டினார். ஆனால், அவருடைய பாராட்டில் படத்தின் இயக்குனரான கோபி நயினார் பெயரை அவர் குறிப்பிடாமல் தவிர்த்தார். இதனால், பா.ரஞ்சித்தின் அந்த டுவிட்டர் பதிவில் வலைதளவாதிகள் அவரை கடுமையாக விமர்சித்து கண்டனங்களைப் பதிவு செய்தனர். அது பின்னர் மீடியாக்களிலும் செய்தியாகப் பரவியது.
இதனால், எங்கே அடுத்து இயக்கி வரும் 'காலா' படத்தின் இமேஜுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற தவிப்பில் பா.ரஞ்சித் தரப்பினர் கோபி நயினாருடன் சமரசமாகப் போக முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். கோபி நயினார் தற்போதும் திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறாராம்.
சில அரசியல் பிரமுகர்கள் முயற்சியில் இந்த சமசர வேலைகள் நடந்துள்ளன. முடிவில் கோபி நயினார் அவர் சார்பாக ஒரு அறிக்கையை வாட்ஸ்-அப் மூலமே பா.ரஞ்சித் தரப்பிற்கு அனுப்பியுள்ளார். அதை ரஞ்சித் தரப்பினரும், கோபி நயினார் அனுப்பியதாக பலருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.
கோபி நயினார் அவருடைய முகப் புத்தகத்திலோ அல்லது பிஆர்ஓ மூலமாகவே அந்த அறிக்கையை அனுப்ப மறுத்துவிட்டதாகவும் தகவல். இதனால் பா.ரஞ்சித் தரப்பு இப்போதைக்கு நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளதாம். விரைவில் கோபி நயினார் மூலமாகவே 'மெட்ராஸ்' படத்தின் கதை அவருடைய 'கறுப்பர் நகரம்' படத்தின் கதையல்ல என பொதுவெளியில் அறிவிக்க வைக்கும் வேலைகளும் நடக்கிறதாம்.