Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் குறிப்பிட்ட 'சூப்பர் ஸ்டார்', ரஜினிக்கு கமல் மட்டுமே...!

15 நவ, 2017 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Rajini---Kamal-wishes-for-honoring-Nandhi-award

தமிழ் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் ஆந்திர மாநில அரசின் என்டிஆர் தேசிய விருது வழங்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

விருது அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குள் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில் ரஜினிகாந்த்தை அவர் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்' என்று குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தினார். அதோடு ஆந்திர அரசு தொடர்ந்து என்னை ஆதரித்து வருவதற்கு நன்றி கடன் பெற்றிருப்பதாகவும் கமல் கூறியிருந்தார்.

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் ரஜினிகாந்த்தும் வாழ்த்திய கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்தார். அதோடு ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கமல்ஹாசனை 'கமல்' என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.

கமல்ஹாசன் வாழ்த்தியதைப் போல பட்டப் பெயருடன் சேர்த்து வாழ்த்தவில்லை. ஒருவேளை கமல்ஹாசனை அவரது ரசிகர்கள் 'உலக நாயகன்' என்று அழைப்பது ரஜினிகாந்துக்குத் தெரியாதோ. அல்லது, அப்படி அழைத்து அவருடைய அரசியல் இமேஜை இன்னும் அதிகப்படுத்த வேண்டாம் என நினைத்தாரோ தெரியவில்லை.

நேற்று அவர்கள் இருவரது டுவீட்டையும் பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக 'சகுனி' படத்தில் கார்த்தியும், சந்தானமும் பேசிக் கொள்ளும் 'ரஜினி, கமல்' வசனம் கண்டிப்பாக ஞாபகத்திற்கு வந்திருக்கும்.

Advertisement
லட்சுமி பார்வதி வேடத்தில் ராய்லட்சுமி?லட்சுமி பார்வதி வேடத்தில் ... 'தீரன் அதிகாரம் ஒன்று' : தெலுங்கு தணிக்கை பிரச்சனை முடிந்தது 'தீரன் அதிகாரம் ஒன்று' : தெலுங்கு ...


வாசகர் கருத்து (5)

Periyasamy - Chennai,இந்தியா
17 நவ, 2017 - 14:13 Report Abuse
Periyasamy முதலில் ரஜினி என்ற சாதாரண நடிகரை உலக நடிகர் கமலோடு ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்கவும். கமல் ஒரு ஆகாயம் ரஜினி நாட் ஈவெண் க்லவுட்ஸ்.
Rate this:
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
15 நவ, 2017 - 20:50 Report Abuse
Tamizhan kanchi இவரெல்லாம் உலகநாயகன் என்று யார் சொன்னார்கள். இயக்குனர் அவன் படம் ஒடுவதற்கு உளறியது..
Rate this:
Balu Venu - Coimbatore,இந்தியா
15 நவ, 2017 - 16:06 Report Abuse
Balu Venu ஒரு முடிவோடுதான் செய்திக்கு கட்டுரை எழுதுகிறீர்கள். இந்த மாதிரி பற்ற வைத்து கமல் ரஜினிக்கு சிண்டு முடிந்து விட வேண்டும் என எத்தனை நாளாக ஆசை? வெரி சீப் ATTITUDE
Rate this:
raja - tamilnadu,இந்தியா
15 நவ, 2017 - 14:24 Report Abuse
raja என்ன சார் ரஜினியை தமிழ் நடிகர்னு சொல்லி இருக்கீங்க. அவர் தமிழில் நடிக்கும் நடிகர்னு சொல்லுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    Tamil New Film Aan Devathai
    • ஆண் தேவதை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ரம்யா பாண்டியன்
    • இயக்குனர் :தாமிரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in