ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபகாலமாக சில படங்கள் ஆரம்பிக்கும்போதே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து விடுகிறார்கள். ஆனால் அப்படி திட்டமிடப்படும் எல்லா படங்களுமே குறிப்பிட்ட அதே தேதியில் திரைக்கு வந்துவிடுவதில்லை. கடைசி நேரத்தில் சிலபல காரணங்களால் மாற்று தேதியில் ரிலீசாகி வருகின்றன. ஆனால், தெலுங்கில் பவன்கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள அக்னதவாசி மற்றும் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்சிம்ஹா ஆகிய படங்கள் திட்டமிட்டபடியே சங்கராந்திக்கு திரைக்கு வருகின்றன.
இதில் பவன் கல்யாணின் அக்னதவாசி ஜனவரி 10-ந்தேதியும், பாலகிருஷ்ணாவின் ஜெய்சிம்ஹா ஜனவரி 12-ந்தேதியும் வெளியாகின்றன. மேலும், சங்கராந்திக்கு அனுஷ்கா நடித்துள்ள பாக்மதி படமும் திரைக்கு வருவதாக அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது திடீரென்று சங்கராந்தி ரேஸில் இருந்து பாக்மதி விலகிக்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.