Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தென்னிந்தியாவின் டாப் 10 படங்களின் வசூல் பட்டியல்

14 நவ, 2017 - 18:01 IST
எழுத்தின் அளவு:
Top-10-collections-of-South-Indian-movies

தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை எந்த ஒரு படத் தயாரிப்பாளரும் அவர்களது படங்களின் வசூல் எவ்வளவு என்பதைப் பற்றி அறிவித்ததே இல்லை. இருந்தாலும் படத்தை ஓட வைக்கவும், அந்தந்த பட நாயகர்களின் திருப்திக்காகவும் சில பல வழிகளில் ஒரு தொகையைப் பரப்புவது வழக்கம். அப்படித்தான் பல படங்களின் வசூல் நிலவரங்களின் விவரங்கள் வெளிவருகின்றன.

சில சமயங்களில் வினியோகஸ்தர்கள் மூலமாகவும், மீடியேட்டர்கள் மூலமாகவும் சில படங்களின் வசூல் விவரம் வெளியிடப்படுகின்றன. இருந்தாலும் எதையும் நாம் அதிகாரப்பூர்வமானவை என்று எடுத்துக் கொள்ள முடியாது.

தமிழில் இதுவரை அதிக வசூலைப் பெற்ற படம் என 'எந்திரன்' படத்தின் வசூல் தொகைதான் முதலிடத்தில் உள்ளது. அந்தத் தொகையை 'மெர்சல்' படம் முறியடிக்குமா என்பது சந்தேகம்தான்.

கடந்த சில நாட்களாகவே தென்னிந்திய அளவில் அதிக வசூலைப் பெற்ற படங்கள் என ஒரு கணக்கு சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவை உண்மையா என்பதைப் பற்றி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். இருந்தாலும், அந்த 10 படங்கள் எவை, அவற்றின் தோராயமான வசூல் எவ்வளவு என்பது...கீழே...

1. பாகுபலி 2 - தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் - 1700 கோடி
2. பாகுபலி - தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் - 600 கோடி
3. எந்திரன் - தமிழ், தெலுங்கு, ஹிந்தி - 289 கோடி
4. கபாலி - தமிழ், தெலுங்கு, ஹிந்தி - 286 கோடி
5. மெர்சல் - தமிழ், தெலுங்கு - 240 கோடி (இன்னமும் திரையில்)
6. ஐ - தமிழ், தெலுங்கு, ஹிந்தி - 239 கோடி
7. கைதி நம்பர் 150 - தெலுங்கு 164 கோடி
8. சிவாஜி - தமிழ், தெலுங்கு, ஹிந்தி - 155 கோடி
9. லிங்கா - தமிழ், தெலுங்கு, ஹிந்தி - 154 கோடி
10. மகதீரா - தமிழ், தெலுங்கு, மலையாளம் - 150 கோடி

இந்த பத்து படங்களில் 'எந்திரன், கபாலி, மெர்சல், ஐ, சிவாஜி, லிங்கா' ஆகிய 6 படங்கள் இடம் பெற்றுள்ளது. அதில் நான்கு படங்கள் ரஜினிகாந்த் நடித்துள்ள படங்கள்.

'மெர்சல்' படம் இந்த வாரம் ஓடி முடிந்தாலும் 250 கோடியை மட்டுமே கடக்குமே தவிர 'கபாலி' வசூலை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

தென்னிந்திய அளவில் அடுத்த மிகப் பிரம்மாண்ட படைப்பாக ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' படம் வெளிவர உள்ளது. அந்தப் படத்தின் வசூல் சாதனை எப்படியிருக்கப் போகிறது என்பதுதான் பலரின் கேள்வி.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அஞ்சலிக்கு போட்டியாக மகளை களமிறக்கும் சித்திஅஞ்சலிக்கு போட்டியாக மகளை ... ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசு விருது ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசு விருது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Hariram Vanitha Hariram - madurai,இந்தியா
15 நவ, 2017 - 11:36 Report Abuse
Hariram Vanitha Hariram தலைவர் தாண்ட எப்பவுமே சூப்பர் ஸ்டார்
Rate this:
saravanan - kadayanallur  ( Posted via: Dinamalar Windows App )
15 நவ, 2017 - 10:11 Report Abuse
saravanan omg....really.no mahesh babu movie in this list
Rate this:
Umash - Doha,கத்தார்
15 நவ, 2017 - 01:53 Report Abuse
Umash விஸ்வரூபம் லிஸ்டில் வரவில்லை ???
Rate this:
14 நவ, 2017 - 18:16 Report Abuse
KrishnaMurthy mersal next Hindi dup release top 2 Vijay South super star
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in