‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடித்த ஒன்றிரண்டு படங்களிலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நாயகியாக வலம் வர ஆரம்பித்தவர் நடிகை அஞ்சலி. ஆனால் தனது சித்தி பாரதி தேவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வந்தாலும் அஞ்சலியால் தனது பழைய இடத்தை நிரப்ப முடியவில்லை.
இந்நிலையில் அஞ்சலியின் சித்தி பாரதி தேவி, தனது மகள் ஆராத்யாவை சினிமாவில் களமிறக்கி உள்ளார். தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஆராத்யா. விரைவில் தமிழ் படத்திலும் நடிக்க இருக்கிறார். அதற்கான முயற்சிகள் நடந்து வருவதோடு, ஆராத்யாவின் புதிய போட்டோ சூட் ஒன்றும் கோலிவுட்டில் உலா வர தொடங்கியுள்ளது.
சமீபத்தில் அஞ்சலியின் தங்கை சினிமாவில் அறிமுகமாகிறார் என்ற செய்தி வந்தது, ஆனால் தனக்கு தங்கை யாருமில்லை, ஒரே ஒரு அக்கா மட்டும் தான் இருக்கிறார் என்று அஞ்சலி தெரிவித்தார். ஆனால், மற்றொரு பேட்டியில் ஆராத்யா, அஞ்சலி எனது அக்கா தான் என்று கூறியிருப்பதோடு, தான் சினிமா நடிகையாக மாற அவர் தான் காரணம், எனக்கு நிறைய ஊக்கம் அளித்துள்ளார். அவர் என்னை தங்கை இல்லை என்று சொன்னாலும், ஆனால் உண்மை மாறாது என்று கூறியுள்ளார்.