‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தற்போது அடல்ட் கண்டன்ட் என்கிற ஆபாசப்படங்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. அண்மையில் வெளியான தரமணி, ஹர ஹர மகாதேவகி படங்களுக்கு முன் வெளியாகி வசூலைக்குவித்த அடல்ட் கண்டன்ட் படம் படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் முதலானோர் நடிப்பில் வெளியானது இந்தப்படம். அப்போது வசூலைக்குவித்த இந்த படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இந்த படத்தை தொடர்ந்து தனது மூன்றாவது படமாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் ஆதிக். இந்த படம் காதல் பேண்டஸி திரைப்படமாக, 3D தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கிறது.
'அரண்மனை' படத்தை தயாரித்த 'விஷன் மீடியா' தினேஷ் கார்த்திக் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சோனியா அகர்வாலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகிறது.