ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன், முதன்மை ரோலில் நடித்து வெளியாக உள்ள படம் "தாதா 87". குழந்தைகள் பாலியல் கொடுமை செய்யப்படுவதற்கு எதிராக களம் இறங்கும் வட சென்னை தாதாவாக சாருஹாசன் நடிக்கிறார். இவருடன் ஜனகராஜ், மனோஜ் குமார், கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் ஸ்ரீஜி இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.
சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக குறிப்பாக குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆகவே, படத்தின் டைட்டில் கார்ட்டில் புகைப்பிடிப்பது, மது குடிப்பது தொடர்பான எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவது போன்று பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களும் இடம் பெற வேண்டும் தாதா படக்குழு விரும்புகிறது.
ஆகவே இனி வரும் படங்களில் "அனுமதி இன்றி பெண்களை தொடுவது குற்றத்திலும் பெரும் குற்றம்" என்ற எச்சரிக்கை வாசகம் இடம் பெற வேண்டும் என அரசை பரிந்துரைத்துள்ளது தாதா 87 படக்குழு. இதுதொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன. ஒருவேளை அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இனி வரும் காலங்களில் ரிலீஸாகும் படங்களில் இனி இந்த வாசகமும் இடம் பெறலாம் என தெரிகிறது.