‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கேரளாவைச் சேர்ந்த சர்ஜூன் கே.எம் என்பவரது இயக்கத்தில் நடிகை லட்சுமி பிரியா நடித்துள்ள குறும்படம் - லட்சுமி. பெண்ணின் பாலியல் சுதந்திரத்தைப் பற்றி பேசுகிற பெயரில் எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தில், லட்சுமி என்ற திருமணமான நடுத்தர பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கணவன் மீது அதிருப்தியுற்று இருக்கும் லட்சுமி என்ற பெண், இரயில் சிநேகம் மூலம் அறிமுகமான இளைஞனிடம் கள்ளக்காதல் வயப்படுவதுபோலவும், அவனுடன் உடல்ரீதியான தொடர்பு கொள்வதுபோலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மிக அழகான ஒளிப்பதிவு, இசை என தொழில்நுட்பத்தில் நேர்த்தியான படைப்பாக இருந்தாலும், கருத்து ரீதியாக தமிழ்கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக லட்சுமி குறும்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அதில் நடித்த லட்சுமிப்ரியாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
எனவே பயந்துபோன லட்சுமி ப்ரியா கடந்த சில தினங்களாக வெளியே தலைகாட்டாமல் இருக்கிறாராம். பேட்டிக்காக மீடியாக்கள் அவரை தொடர்பு கொண்டாலும் பதில் கொடுக்காமல் உள்ளார்.