ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மீண்டும் கெளதம் மேனனின் துருவநட்சத்திரம் படத்தில் நடிக்க முயற்சி எடுத்தார் மஞ்சிமா மோகன். ஆனால் அது ஒர்க் அவுட்டாகவில்லை. அதையடுத்து விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்திலும், உதயநிதியுடன் இப்படை வெல்லும் படத்திலும் நடித்தார். இதில் இப்படை வெல்லும் படத்தில் தனது அழகை பார்த்து அசந்து விட்டாராம் மஞ்சிமாமோகன். அந்த அளவுக்கு அந்த படத்தின் பாடல் காட்சிகளில் அவரை அழகாக படமாக்கியிருந்தார் ஒளிப்பதிவாளர்.
இதுபற்றி மஞ்சிமா கூறுகையில், பொதுவாக வசன காட்சிகளை விட பாடல் காட்சிகளை நடிகர் நடிகைகள் ஒளிப்பதிவாளர்கள் ரொம்பவே அழகாக காண்பிப்பார்கள். அந்த வகையில், இப்படை வெல்லும் படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் என்னை ரொம்ப அழகாக காண்பித்திருந்தார். அந்த படத்தின் பாடல் காட்சியில் என்னைப்பார்த்து நானே அசந்து விட்டேன். அதையடுத்து, அவருக்கு உடனடியாக போன் செய்து எனது நன்றியை தெரிவித்தேன் என்கிறார் மஞ்சிமாமோகன்.