த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு! | அதிகாரிகள் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்! ஷாரூக் | விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்! | டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா! | ரஜினியின் அடுத்த படம் கே.வி.ஆனந்துடன்?! | கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்! | ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | முடிவுக்கு வருமா பெப்சி தொழிலாளர்கள் சம்பளப்பிரச்னை....? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை | எடியூரப்பா மகனுக்கும் எனக்கும் தொடர்பில்லை! நடிகை ஹரிப்பிரியா! | கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது! |
தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக ரூ.5லட்சம் நிதியதவி வழங்கியுள்ளார் நடிகை நயன்தாரா. தமிழகத்தை கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை புரட்டி போட்ட தானே புயலால் ஏராளமான பேர் வீடுகளை இழந்து பிழைக்க கூட வழியின்றி பலர் தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். இதனை முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வழங்கினார். ஏற்கனவே நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.