Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போராட்டங்களால் மெர்சலுக்கு நல்ல பெயர்: எஸ்.ஏ.சந்திரசேகர்

14 நவ, 2017 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Mersal-good-name-by-protest-says-SA-Chandrasekar

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜய் ரசிகர் ஸ்ரீதாத் என்பவர் மெர்சல் படத்திற்காக விஜய்யின் கட்வுட் கட்டும் பணியில் இருந்தபோது விபத்தில் சிக்கி இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு விஜய் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்த உதவியை வழங்குவதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்த விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருவனந்தபுரம் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் முன்னிலையில் நிவாரணத் தொகையை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பெரும்பாலான நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டையும் தாண்டி கேரளாவில் விஜய்க்கு உயிரைக் கொடுக்கிற ரசிகர்கள் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. எவ்வளவு நிதி கொடுத்தாலும் அது ஸ்ரீநாத்தின் உயிருக்கு ஈடாகாது. அந்த குடும்பத்தின் மகனாக விஜய் இருப்பார் என்றார்.

பின்னர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது "விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. காலம் அவரை எப்படி மாற்றும் என்பதை யாராலும் கணிக்க முடியாது" என்றார்.

மெர்சலுக்கு எதிரான போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் "மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி விதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத்தான் மெர்சல் படத்தில் வசனமாக வைத்தனர். அதில் ஜிஎஸ்டி பற்றி தவறாக எதுவும் கூறவில்லை. ஆனால் தவறான கருத்துக்கள் இடம்பெற்றதாக கூறி நடத்தப்பட்ட போராட்டங்களால் படத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது" என்றார்.

Advertisement
முன்னணியில் இருக்கும் நயன்தாரா, த்ரிஷாமுன்னணியில் இருக்கும் நயன்தாரா, ... ஒளிப்பதிவாளருக்கு நன்றி சொன்ன மஞ்சிமாமோகன்! ஒளிப்பதிவாளருக்கு நன்றி சொன்ன ...


வாசகர் கருத்து (1)

14 நவ, 2017 - 14:51 Report Abuse
SasiKumar ஆக படம் குப்பை தொட்டி ஒத்து கொண்டார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in