ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது பிஸியாக இருக்கம் ஹீரோயின்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், தமன்னா, எமி ஜாக்சன், அமலா பால் என சிலரை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களில் மிகவும் சீனியர் நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா மட்டுமே தற்போது ரொம்பவும் பிஸியாக இருக்கிறார்கள்.
நயன்தாரா கைவசம் தற்போது “வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ” ஆகிய நான்கு படங்கள் உள்ளன. த்ரிஷா “மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 96” ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார். மற்ற இளம் ஹீரோயின்களைக் காட்டிலும் முப்பது வயதைக் கடந்த இந்த இரண்டு ஹீரோயின்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.
திருமணமாகி திருமதியான சமந்தா “இரும்புத் திரை, சூப்பர் டீலக்ஸ், சிவகார்த்திகேயன் படம்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் 'தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி 2' படங்களிலும், தமன்னா 'ஸ்கெட்ச்' படத்திலும், காஜல் அகர்வால் 'பாரீஸ் பாரீஸ்' படத்திலும், எமி ஜாக்சன் '2.0' படத்திலும், அமலா பால் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், சின்ட்ரெல்லா' படங்களிலும் நடித்து வருகிறார்கள்.
இளமையையும் மீறி அனுபவம் மட்டுமே தற்போது முன்னணியில் இருந்து வருவது ஆச்சரியமானது தான்.