Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் மெஹ்ரின் காட்சிகள் நீக்கம்

14 நவ, 2017 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Nenjil-thunivirunthal-heroine-scene-trimmed

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரின், சூரி நடித்த படம் நெஞ்சில் துணிவிருந்தால். இமான் இசை அமைத்திருந்தார். கடந்த 10ந் தேதி இந்தப் படம் வெளிவந்தது. படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தது. படம் நீளம் என்பதும். காதல் காட்சிகள் திணிக்கப்பட்டிருக்கிறது என்பதும் பொதுவான விமர்சனமாக இருந்தது. கடும் மழை காரணமாகவும் படத்தின் வசூல் மிகவும் பாதித்தது.

இதனால் படத்தை மறு எடிட் செய்துள்ளார் சசீந்திரன். இதில் ஹீரோயின் மெஹ்ரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது. இடைவேளை பிளாக்கிலும், கிளைமாக்சிலும் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுசீந்திரன் கூறியதாவது:

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. நெஞ்சில் துணிவிருந்தால் திரை படத்தின் புதிய வெர்சன் அனைத்து திரை அரங்குகளிலும் திரையிடப்பட்டு உள்ளது. நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரின் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரின் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கினோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

Advertisement
கமல், விஷால் அரசியலுக்கு வரலாம் - கார்த்தி கருத்துகமல், விஷால் அரசியலுக்கு வரலாம் - ... உலக படங்களை பாராட்டுவது போல் நம்ம படங்களையும் பாராட்டுங்கள்: பாரதிராஜா உலக படங்களை பாராட்டுவது போல் நம்ம ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Kanmani Pappa
    • கண்மணி பாப்பா
    • நடிகர் : தமன் குமார்
    • நடிகை : மியா ஸ்ரீ
    • இயக்குனர் :ஸ்ரீமணி
    Tamil New Film Pandimuni
    • பாண்டிமுனி
    • நடிகை : நிகிஷா பட்டேல்
    • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
    Tamil New Film Narai
    • நரை
    • இயக்குனர் :விவி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in