Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல், விஷால் அரசியலுக்கு வரலாம் - கார்த்தி கருத்து

14 நவ, 2017 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Kamal---Vishal-may-enter-in-Politics-says-Karthi

தமிழ்த் திரையுலகத்திலிருந்து அடுத்து எந்த நடிகர் அரசியலுக்கு வரப் போகிறார் என அரசியல் உலகிலும், திரையுலகிலும் பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், சரத்குமார், விஜயகாந்த் என இதற்கு முன் சிலர் அரசியலில் இறங்கினர். இவர்களில் எம்ஜிஆர்., மற்ற யாராலும் அரசியலில் ஜொலிக்க முடியவில். விஜயகாந்த் மட்டும் எதிர்கட்சி தலைவராக வளர்ந்தார்.

ரஜினிகாந்த் 20 வருடங்களாகவே அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதை சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருக்கிறார். அவருக்கு முன்னதாக கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து விடுவார் போலிருக்கிறது. இந்தப் பட்டியலில் இன்னும் விஷால், விஜய் என சிலர் சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரன் ஒன்று படத்தின் தெலுங்கு பதிப்பான 'காக்கி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அவரிடம் அரசியல் சம்பந்தமான சில கேள்விகள் கேட்கப்பட்டன.

கார்த்தி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா எனக் கேட்டதற்கு, “எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சி, அரசியலுக்கு வரதுக்கு எனக்கு நேரமில்லை” என நகைச்சுவையாக பதிலளித்தார்.

அடுத்து, கமல்ஹாசன், விஷால் அரசியல் பிரவேசம் பற்றி அவரிடம் கேட்டதற்கு, “விஷாலுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, அரசியல் அவருக்குப் பொருத்தமா இருக்கும். கமல்ஹாசன் ஒரு நல்ல அரசியல்வாதியா வரலாம். கமல் ஒரு விஷயத்தை பேசினாலோ, செய்தாலோ அவர் அது பற்றி சரியான ஆராய்ச்சி பண்ணிட்டு தான் செய்வார். அதை செய்வதற்கு முடிவு பண்ணி அவர் இறங்கிட்டால், திரும்ப அதில் இருந்து பின் வாங்க மாட்டார். அவர் அரசியலுக்கு வந்தால் மக்கள் அவரை எளிதில் அணுக முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என கருத்து தெரிவித்தார்.

Advertisement
தமிழுக்கு வரும் பாகிஸ்தான் பாடகர்தமிழுக்கு வரும் பாகிஸ்தான் பாடகர் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் மெஹ்ரின் காட்சிகள் நீக்கம் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் ...


வாசகர் கருத்து (12)

Endrum Indian - Kolkata,இந்தியா
14 நவ, 2017 - 16:01 Report Abuse
Endrum Indian வாங்கடா வாங்க எங்க தலை, எங்க புரட்சித்தலைவர் என்று சொல்லி சினிமா பார்ப்பதற்கு கியூவில் நின்றவர்கள் இப்போ வோட்டு போடும் போதும் அப்படியே நிற்க வேண்டும் என்று தானே சொல்கின்றீர்கள். ராஜா காலத்தில் தேவதாசிகள் செய்து வந்த காரியத்தை இன்று இவர்கள் செய்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கு ராஜா போல மரியாதை. படித்தவன் இதற்காகத்தான் இந்த தொழிலுக்கு வருவதில்லை இப்போது வரை. ஆனால் இப்போ அவர்கள் கூட ஊழல் மிகுந்த அளவில் செய்ய ஆரம்பித்து விட்டதினால் இந்த "தொழிலுக்கு" மிக விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Rate this:
Nathan - Bengaluru,இந்தியா
14 நவ, 2017 - 13:21 Report Abuse
Nathan ஏன் சிறந்த நிர்வாக திறமை, பணியில் நேர்மை, தெளிவான தொலைநோக்கு சிந்தனை உடைய ஓய்வு பெற்ற கலெக்டர்கள் மற்ற துறை அதிகாரிகள் அல்லது நிறுவனங்களை நிர்வகித்த தலைவர்கள் தமிழக அரசியலுக்கு வர தயங்குகிறார்கள். இதற்கு நாம்தான் காரணம். சினிமா மோகத்தில் நம் முன்னோர்கள் காமராஜரையே தொலைத்தார்கள். கடந்த 50 வருடமாக தமிழகத்தை திரை துறையை சார்ந்தவர்களே ஆள நாமும் துணை நின்றோம். இதனால் முதல்வர் கனவுகளோடு அரசியலுக்கு வர எந்த நடிகர்களுக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். அரசியலில் காமராஜர்கள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் எண்ணங்கள் உயர்வடையும் பொழுதுதான் அது நடக்கும்..
Rate this:
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
14 நவ, 2017 - 12:37 Report Abuse
Tamizhan kanchi இவர்கள் எல்லாரும் வேஸ்ட் ஃபெல்லோஷ் .இது அம்மா ஆண்ட பூமி. தாய்க்குலத்திற்கே மரியாதை..... ஆச்சி சரோஜா தேவி , சித்தி ராதிகா , அண்ணி ஜோதிகா ,,அக்கா நயன்தாரா ,தங்கை தமன்னா இவர்களில் ஒருவர்தான் நாளைய சி.எம்.... தமிழ்நாடே அதிரும்ல....
Rate this:
syed - nellai,இந்தியா
14 நவ, 2017 - 11:55 Report Abuse
syed கொளுத்தி போடுடா மாமா
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
14 நவ, 2017 - 11:28 Report Abuse
s.rajagopalan போகிற போக்கை பார்த்தால் தமிழக அரசு நடிகர் சங்க தேர்தலாக ஆகிவிடும்போல் இருக்கிறதே ? ஒன்று செய்யலாம். முதலமைச்சர் ஆக ஆசைப்படும் எல்லா நடிகர்களும் அவர்களின் ரசிகர்களை வாக்காளர்களாக பாவித்து ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். அதிக ரசிகர்கள் உள்ள நடிகர் வெற்றி பெறுவார். அவர் உருவாக்கும் கட்சிக்கு எல்லா நடிகர்களும் ஆதரவு தரவேண்டும். இதில் ஒன்று நிச்சயம். டெபாசிட் கிடைக்கும்
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in