ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் 'செய்' படத்தில் இடம்பெறும் 'இறைவா...' என்ற பாடலை பாடியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் பாடகரான ஆதிப் அலி. ஏற்கெனவே பல பாகிஸ்தானி பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் ஆதிப் அலி பாடியிருக்கிறார் என்பதோடு, ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'ஜூலி 2' படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழில் பாடுவது இதுவே முதல்முறை. இவருடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகரான சபதஸ்வரா ரிஷுவும் 'இறைவா....' பாடலை பாடியுள்ளார்.
நகுல் ஜோடியாக அஞ்சால் முஞ்சல் நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ராஜ் பாபு இயக்கியுள்ளார். 'ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் மன்னு மற்றும் உமேஷ் இணைந்து தயாரித்துள்ளார்கள். டிசம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது.