ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தததினால், தற்போது படமில்லாமல் இருக்கிறார். அதனால் தன்னுடைய நண்பர் விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
இதற்கிடையில், அவர் பாடி சமீபத்தில் 'தட்றோம் தூக்கறோம்...'' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதனால் பி.ஜே.பியினரின் கண்டனத்துக்குள்ளான சிம்பு, அந்தப்பாடல் மூலம் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் தனது ரசிகர்களுக்காக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் சிம்பு.
''சக்க போடு போடு ராஜா' படத்தின் பாடல்களுக்கும் டிரைலருக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்கீங்க! ரொம்ப நாள் ஆச்சு! உங்ககிட்ட பேசணும்னு தோணிடுச்சு. என்னோட மத்த சாங்சுக்கும் ரெஸ்பான்ஸ் குடுத்துட்டிருக்கீங்க! இப்ப சோஷியல் மீடியாவில் வேற இல்ல. பசங்க எல்லாம் பாவம்! நானும் உங்கள நிறைய மிஸ் பண்றேன். நீங்கல்லாம் இருக்கீங்க! பார்த்துப்பீங்கன்ற நம்பிக்கை இருக்கு. இது வந்து படத்தோட கெட்-அப் எல்லாம் இல்ல! அதபத்தி யோசிக்காதீங்க! வேறு ஒரு விஷயம் இருக்கு. வெயிட் பண்ணுங்க, மீண்டும் வருவேன்'' என்று அதில் பேசியிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கிறது என்று சொல்லப்பட்ட நிலையில் தன்னுடைய ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்டிருப்பதோடு, ''வேறு ஒரு விஷயம் இருக்கு. வெயிட் பண்ணுங்க'' என்று சஸ்பென்ஸும் வைத்திருக்கிறார்.