வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
வாரிசு நடிகர்கள் என்பது எல்லா மொழி சினிமாவிலும் இருக்கிறது. பாலிவுட்டில் பல வாரிசு நடிகர்கள் உள்ளனர். அவர்களில் நடிகர் சைப் அலிகானின் மகள், சாரா அலிகான், கேதர்நாத் படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் களமிறங்கி உள்ளார். சாராவுக்கு ஜோடியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார். அபிஷேக் கபூர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இதனிடையே, சாரா மீது சல்மான் கோபத்தில் இருக்கிறாராம்.
காரணம், தனது தங்கை அர்பிதாவின் கணவர் ஆயுஸ் சர்மாவை ஹீரோவாக்கி ஒரு படத்தை தயாரிக்கிறார் சல்மான். இதில் ஆயுஷ் ஜோடியாக சாராவை நடிக்க வைக்க எண்ணினார். ஆனால் அந்தப்படத்தில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்து விட்டாராம். இதனால் அவர் மீது சல்மான் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.