இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சசி இயக்கத்தில் நடித்த பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் மார்க்கெட் எகிறி விட்டது. அதோடு அந்த படம் தெலுங்கில் பிச்சைக்காடு என்ற பெயரில் வெளியாகி தமிழுக்கு இணையாக வசூலித்து அங்கேயும் அவருக்கென ஒரு வியாபார வட்டத்தை உருவாக்கியிருக்கிறது. அதனால் தற்போது அவர் நடித்துள்ள அண்ணாதுரை படத்தை தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்.
மேலும், பிச்சைக்காரனுக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தின் ஆடியோ விழாவின்போது அந்த படம் சம்பந்தப்பட்ட 10 நிமிட காட்சிகளை திரையிட்ட நிலையில், நவம்பர் 15-ந்தேதி வெளியாகும் அண்ணாதுரை படத்தின் ஆடியோ விழாவின்போதும் பத்து நிமிட படக்காட்சிகளை மீடியாக்களுக்கு திரையிட்டு காண்பிக்க உள்ளார் விஜய் ஆண்டனி. தெலுங்கிலும் இதேப்போன்று 10 நிமிட காட்சிகள் திரையிடப்பட உள்ளதாம்.