Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமுதை பொழியும் நிலவே...! பி.சுசீலா பிறந்தநாள் நாள் ஸ்பெஷல்

13 நவ, 2017 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-P-Susheela

உலகெங்கும் உள்ள பல கோடி மக்களை தன் இனிய குரலால் ஈர்த்துள்ள இந்திய சினிமாவின் பொக்கிஷம் பி.சுசீலா. இவர் இன்று(நவ., 13) தனது 83வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஆந்திரமாநிலம் விஜயநகரம் அருகில் உள்ள புலம்பாக்கத்தில் 1935ம் ஆண்டு நவம்பர் 13ந் தேதி பிறந்தவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாராம் வெங்கடசாமி நாயுடுவிடம் இசை கற்றார்.

ஆரம்பத்தில் வானொலியில் பாடகியாக இருந்தவர், 1953ம் ஆண்டு பெற்றதாயில் "எதற்கு அழைத்தாய்..." என்ற பாடலை ஏ.எம்.ராஜாவுடன் பாடி தனது பாட்டு பயணத்தை தொடங்கினார். அப்போது துவங்கிய சுசீலாவின் இசை பயணம், 12 மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாட வைத்து சாதனை படைக்க வைத்தது.

ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஏ.எம்.ராஜா, சங்கர் கணேஷ், இளையராஜா உட்பட இந்தியாவின் அனைத்து புகழ் பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார்.

உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற "நாளை இந்த வேளை பார்த்து போய் வா நிலா..."வும், சவாலே சமாளியில் இவர் பாடிய "சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு..."வும் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இதுதவிர மூன்று தெலுங்கு பாடல்களுக்கும் தேசிய விருதை வாங்கினார். 11 மாநில அரசு விருகளும் சுசீலாவின் கரத்தை அழகுபடுத்தியது. பல தனி அமைப்புகள் சுசீலாவிற்கு கணக்கில்லாத விருதுகளை வழங்கி தங்களை பெருமைப்படுத்திக் கொண்டன.

சுசீலா அவர்கள் பாடிய சில பாடல்கள் இதோ...

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்...
யாருக்கு மாப்பிள்ளை யாரோ...
முத்தான முத்தல்லவோ...
அமுதை பொழியும் நிலவே...
பருவம் எனது பாடல்...
நெஞ்சத்திலே நீ....
லவ் பேர்ட்ஸ்...லவ்பேர்ட்ஸ்..
அத்தான் என் அத்தான்...
ஆடாமல் ஆடுகிறேன்...
நினைக்கத் தெரிந்த மனமே...
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல..
மாலை பொழுதின் மயக்கத்திலே...
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு...
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்...

இப்படி எத்தனை எத்தனை கானங்களை காற்று சுமந்து திரிகிறது. பூமியில் காற்று உள்ளவரை இந்த கானங்கள் மனிதர்களின் காதுவழி புகுந்து இதயத்தை நனைக்கும்.

நீங்களும் உங்களுக்கு பிடித்த பி.சுசீலாவின் பாடல்களை (கமெண்டில்) குறிப்பிட்டு இசைக்குயிலை வாழ்த்துங்களேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசீலா!!

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
'2.0' : விரைவில் மூன்றாவது பாடல் வெளியீடு'2.0' : விரைவில் மூன்றாவது பாடல் ... அண்ணாதுரை-யிலும் தொடரும் 10 நிமிட காட்சி அண்ணாதுரை-யிலும் தொடரும் 10 நிமிட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

gkrishna - chennai,இந்தியா
15 நவ, 2017 - 12:09 Report Abuse
gkrishna நாளை இந்த வேளை பார்த்து வா வெண்ணிலா, வசந்தத்தில் ஒரு நாள் மணவறை ஓரம், கங்கை கரை தோட்டம், ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினில் என் தாய் வந்தாள், ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்து இருந்தேன், சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் நிலவு வந்து பாடுமோ, நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நெஞ்சை கொள்ளை கொண்ட பாடல்கள் தான் எத்தனை எத்தனை
Rate this:
NAVANEETHA KRISHNAN V - CHENNAI,இந்தியா
13 நவ, 2017 - 18:15 Report Abuse
NAVANEETHA KRISHNAN V ஹாப்பி பர்த்டே மேடம், தங்களை வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறேன். தங்கள் குரல் தமிழுக்கு வரப்பிரசாதம். தங்களின் காலத்தை வென்ற கானங்கள் மூலமாக தாங்கள் காலத்தை வென்றவர் ஆகி விட்டீர்கள். தமிழர்களின் செவிக்கு இன்பம் சேர்க்கும் தங்கள் குரல் இனிமை காலகாலமாக நெஞ்சில் நிறைந்திருக்கும். தங்களுக்கு மீண்டும் இந்த ரசிகனின் நல்வாழ்த்துக்கள்.
Rate this:
13 நவ, 2017 - 16:07 Report Abuse
தியாகராஜன் திருமதி. சுசீலா அவர்களை பாராட்ட சொற்கள் இல்லை. கண்ணியமிக்க பாடல்கள் பாடியவர். தழிழ் உச்சரிப்பை TMS மற்றும் சுசீலா பாடல்களில் சரி பார்த்துக் கொள்ளலாம். பல்லாண்டு காலம் வாழ்க.
Rate this:
RAMASUBRAMANIAN - chennai,இந்தியா
13 நவ, 2017 - 15:15 Report Abuse
RAMASUBRAMANIAN HEARTY BIRTHDAY WISHES TO EVERGREEN MADAM
Rate this:
nirmala - chennai,இந்தியா
13 நவ, 2017 - 14:14 Report Abuse
nirmala happy birthday madam wish you many more happy returns of the day
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in