தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரை நடிகர் சங்கம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து 15ம் ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் சிவன் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தவைரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் சிறப்பு விருந்தினரா கலந்து கொண்டார்.
விழாவில் சின்னத்திரை நடிகர்கள் பற்றிய தகவல்களை கொண்ட டயரியை விஷால் வெளியிட்டார். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராதிகா சரத்குமார் சங்கத்தின் இணைய தளத்தை தொடங்கி வைத்தார். நடிகர்கள் சூரி, ரேபோ சங்கர், விமல், சின்னி ஜெயந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் போஸ் வெங்கட் நன்றி கூறினார்.