Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெர்சலுக்கு உதவியவர்கள் விழித்திருவை கைவிட்டது ஏன்? தன்ஷிகா பரபரப்பு பேச்சு

13 நவ, 2017 - 10:21 IST
எழுத்தின் அளவு:
Dhansika-slams-cine-industry

கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா நடிப்பில் மீராகதிரவன் இயக்கிய "விழித்திரு" படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் பற்றிய திறனாய்வு கூட்டம் மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடந்துது. இதில் கலந்து கொண்டு தன்ஷிகா பேசியதாவது:

சமுதயாத்தில் உள்ள அனைவருக்கும் சமூக உணர்வு உண்டு. சமூக உணர்வு எனக்கும் உண்டு. ஒரு படத்தின் வெற்றியில் கலந்து கொள்வதை விட வேதனையில் கலந்து கொள்வதையே பெருமையாக நினைக்கிறேன். என் மனது பாரமாக இருக்கிறது. என்னால் பேசக்கூட முடியவில்லை. ஒரு இயக்குனரின் 5 வருட போராட்டம் இந்தப் படம். இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதற்கு நன்றி சொன்னார்கள். திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது நடிகர், நடிகைகளின் கடமை. அப்படி கலந்த கொள்ளும்போதுதான் தயாரிப்பாளர்கள் கஷ்டம் தெரியும்.

நான் வெற்றியை விட தோல்வியை அதிகம் பார்த்தவள். ஆனால் இரண்டையும் சமமாக பார்க்க பழகிக் கொண்டேன். கபாலி வெற்றியின் போதும் நான் அதை தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லை. அதன் பிறகு தோல்வி படங்களில் நடித்தபோதும் தலைகவிழ்ந்து இருக்கவில்லை. ஒரு தமிழ் பெண் சினிமாவில் வளர்வது இந்த சமூகத்தில் மிகவும் கடினம். ஆனால் நான் போராடி வந்து கொண்டிருக்கிறேன்.

விழித்திரு படத்துக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. படம் நன்றாக இருந்தும் பேசப்பட்டும் படம் சரியாக போகவில்லை. இது எனக்கு முதல் அனுபவம் இல்லை. இதற்கு முந்தைய உரு படமும் நன்றாக இருந்தும் சரியாகப் போகவில்லை. விழித்திரு படம் முன்பே வெளிவந்திருக்க வேண்டியது. தயாரிப்பாளர் சங்கப் போராட்ட அறிவிப்பால் வெளிவர முடியவில்லை. அதன் பிறகு வந்த மெர்சல் படத்துக்கு திரையுலகமே உதவி செய்தது. வழித்திரு பற்றி யாரும் கவலைப்படவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியில்லை. பணம் இருப்பவர்களால் இங்கு எதையும் சாதிக்க முடியும் என்பதையே இது உணர்த்துகிறது.

கபாலி படத்தால் என் மார்க்கெட் உயரவில்லை. எனக்கான மார்க்கெட் என்னவோ அதுதான் இருக்கிறது. கபாலி படத்துக்காக முடியை வெட்டினேன். பெரிய படம், ரஜினி சாருடன் நடிப்பதால் நான் அப்படிச் செய்தேன். ஆனால் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த பெண்களும் வெட்டினார்கள். காரணம் அவர்களுக்கு சினிமா மேல் இருக்கும் பக்தி.

இதே படத்தின் இன்னொரு விழாவில் டி.ராஜேந்தர் பேசியதை பற்றி பலரும் என்னிடம் கருத்து கேட்டார்கள். நான் சொல்ல மறுத்து விட்டேன். அதிலிருந்து நான் வெளிவர ஒரு வாரம் ஆனது. அவர் பெரிய பக்திமான் என்றார்கள். எந்த பக்திமானும் அப்படி பேச மாட்டார்கள். நான் அந்த நிகழ்வை மறக்க நினைக்கிறேன்.

இவ்வாறு தன்ஷிகா பேசினார்.

Advertisement
நடிகை லேகா வாஷிங்டன் திருமணம்: பத்திரிக்கையாளரை மணக்கிறார்நடிகை லேகா வாஷிங்டன் திருமணம்: ... பணமதிப்பிழப்பு பாடல் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்: சிம்பு பணமதிப்பிழப்பு பாடல் ...


வாசகர் கருத்து (12)

baski - Chennai,இந்தியா
13 நவ, 2017 - 16:38 Report Abuse
baski படம் வெளியிடுறப்ப அக்கா டுமிழிசைய திட்டுனா படம் ஹிட்டு...
Rate this:
shankar - chennai,இந்தியா
13 நவ, 2017 - 15:40 Report Abuse
shankar கேடு கேட்ட சினிமா பத்தி கருது போடுனும்னா வார்த்தைகள் பத்தாது நல்ல சினிமாக்கள் பேசும் படம் தொடங்கி 1980 களில் முடிவுற்றுவிட்டது.
Rate this:
ramtest - Bangalore,இந்தியா
13 நவ, 2017 - 15:02 Report Abuse
ramtest சினிமா இனி மெல்ல தேயும் ... அது இனி கலை வடிவம் இல்லை .. .கருப்புப்பணத்தை வெளுக்கும் வெள்ளாவி நிலையம் ... உங்களுக்கு இருக்கும் திறமையை பயன் படுத்தி வேறு துறைக்கு மாறிக்கொள்ளுங்கள் ....
Rate this:
Sivaranjani - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13 நவ, 2017 - 14:29 Report Abuse
Sivaranjani ndha press meetla padam nadithavarkal thavira matha ellorum pesum podhu poduva sonna oru karuthu enna na.. indha padatha promote panna thavaritanga.
Rate this:
Vijay Raj - Chennai,இந்தியா
13 நவ, 2017 - 13:26 Report Abuse
Vijay Raj கபாலி வெற்றி படமா? நீங்க தான் மெச்சிக்கணும். தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி நஷ்டம்
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Julie 2
  • ஜூலி 2
  • நடிகை : லட்சுமி ராய்
  • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in