Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் என்றும் பயந்தது இல்லை : சிம்பு

11 நவ, 2017 - 18:38 IST
எழுத்தின் அளவு:
Police-protection-:-I-never-fear-to-speak-the-truth-says-Simbu

மத்திய அரசு, கடந்தாண்டு நவ., 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகின. இது அறிவிக்கப்பட்டு ஓராண்டாகி உள்ள நிலையில் மத்திய அரசை கண்டித்து எதிர்கட்சியினர் கறுப்பு தினமாக அனுசரித்தினர். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை திரையுலகினர் சிலரும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்தனர். நடிகர் கமல் கூட ஆரம்பத்தில் ஆதரித்தவர், இப்போது எதிர்த்துள்ளார்.

இந்நிலையில் நவ., 8-ம் தேதி, "தட்டுரோம் தூக்குறோம்" என்ற பெயரில் "DemonetizationAnthem" பாடல் வெளியானது. கபிலன் வைரமுத்து எழுதிய இந்தப்பாடலை சிம்பு பாடியிருந்தார். இதில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து இருந்தனர். அதோடு விஜய் மல்லையா போன்றவர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோடிய விஷயத்தை எல்லாம் இணைத்துள்ளனர்.

மத்திய அரசை விமர்சிப்பது போன்று இந்த பாடல் இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக பா.ஜ., தரப்பில் சிம்புவிற்கு எதிர்ப்பு கிளம்பலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தி.நகரில் உள்ள சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிவி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் சிம்பு. அதில் அவர் கூறியிருப்பதாவது... இந்தப்பாடலை நான் எழுதவில்லை, நான் இசையமைக்கவில்லை. இப்படி ஒரு பாடலை பாட சொல்லி கேட்டு என்னிடம் வந்தார்கள். படித்து பார்த்து எனக்கு பிடித்திருந்ததால் நானும் பாடினேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மக்கள் சந்தித்த பிரச்னைகளை அந்த பாடலில் சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் நன்மையும் இருக்கும், தீமையும் இருக்கும். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப்பாடல் உருவாக்கப்படவில்லை. இந்த பாடலை பாடியதற்காக வருத்தப்படவில்லை, எனக்கு உண்மை என்று தோன்றியதை துணிந்து சொல்ல நான் என்றும் பயந்தது கிடையாது.

இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.

Advertisement
நம்ம போலீஸ் நம்பகமான போலீஸ் : விஷால் பாராட்டுநம்ம போலீஸ் நம்பகமான போலீஸ் : விஷால் ... வர்மா பட நாயகி எப்படி இருக்கனும்: வீடியோ வெளியிட்ட விக்ரம் வர்மா பட நாயகி எப்படி இருக்கனும்: ...


வாசகர் கருத்து (27)

Hafees Ali - No.6, Dubai Kurukkusandhu, DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12 நவ, 2017 - 12:00 Report Abuse
Hafees Ali அடுத்த IT ரெய்டு சிம்பு வீட்டிற்கு....
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
12 நவ, 2017 - 10:29 Report Abuse
S Ramkumar உங்க படத்தை பார்த்து நாங்க தான் பயப்படணும்..
Rate this:
senthilkumar - bangalore,இந்தியா
12 நவ, 2017 - 09:49 Report Abuse
senthilkumar கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் தான் உண்மையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். நேர்மையாக பணம் சேர்த்தவர்களுக்கு சில நாட்களே சிரமம் இருந்தது, பின்பு சரியாகவிட்டது. சில கருப்பு ஆடுகள் தப்பித்திருந்தாலும், அவர்களின் கணக்கு கண்காணிப்பு மற்றும் விசாரணை வளையத்தில் உள்ளது. இந்த உண்மை எதுவும் தெரியாமல், வெறுமனே மக்களை கேடயமாக வைத்து, இவர்கள் நல்லவர்கள் போல் ஏமாற்றிகொண்டிருக்கிறார்கள். கருப்புப்பணம் அதிகம் முதலீடு செய்வது திரைத்துறைதான். இந்த உண்மை சிம்புவிற்கு தெரியாதா? இதையும் துணித்து சொல்ல வேண்டும் .
Rate this:
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
12 நவ, 2017 - 09:43 Report Abuse
Nallappan Kannan Nallappan நீ பயப்படாதவன் தான் பின்ன எதுக்கு நீ....
Rate this:
baski - Chennai,இந்தியா
12 நவ, 2017 - 09:39 Report Abuse
baski சிம்பு பாடுனாதான் மாதர்சங்கம்னு ஒண்ணு இருக்குறதே தெரியுது.......நன்றி சிம்பு.....
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in