ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'அறம்' படத்தை நயன்தாராவின் மானேஜர் ராஜேஷ்தான் தயாரித்துள்ளார். இதுவரை தான் நடித்துள்ள எந்த ஒரு படத்திற்கும் பேட்டியோ, அல்லது அந்தப் படம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலோ கலந்து கொள்ள மறுப்பவர் நயன்தாரா. ஆனால், 'அறம்' படத்திற்காக சில வாரங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு பேட்டி எல்லாம் கொடுத்தார். அவர் நடித்துள்ள படங்கள் எப்படி ரசிகர்களின் வரவேற்பைப் பெறுகின்றன என்பதையெல்லாம் கூடப் பார்க்க மாட்டார்.
மூத்த பத்திரிகையாளர்கள் கூட நயன்தாராவைத் தொடர்பு கொள்வது அவ்வளவு கடினம். அவருடைய மலையாளத் தோழி ஒருவருக்கு மட்டும் தான் தன்னைப் பற்றிய தகவல்களைத் தருவார் நயன்தாரா. வேறு எந்த தமிழ்ப் பத்திரிகையாளரையும் அவருக்குத் தெரியாது. இப்படி ஒரு வட்டத்துடன்தான் இத்தனை காலம் திரையுலகில் இருந்து வருகிறார்.
'அறம்' படத்தைப் பற்றி நேற்றிலிருந்தே பல நல்ல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மீடியாக்களிலும் படத்திற்கு சாதகமான விமர்சனங்கள் வருகின்றன. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ரசிகர்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள நயன்தாரா இன்று காலை சில தியேட்டர்களுக்கு நேரில் சென்று கவனித்துள்ளார். நயன்தாராவின் இந்த மாற்றம் ஆச்சரியமளிக்கிறது. ஒரு வேளை அவர் விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.