ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நீண்டகாலமாகவே அரசியலுக்கு வரப்போவதாக சொல்லிக்கொண்டு வந்த ரஜினிகாந்த், காலா படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக சூசகமாக அறிவித்தார். ஆனால் அதையடுத்து டுவிட்டரில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்து வெளியிட்டு வந்த கமல், திடீரென்று தான் அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிக்கு முன்பே உறுதிபடுத்தி விட்டார்.
அரசியலுக்கு வரவே மாட்டார் என்று நினைத்த கமல் அரசியலுக்கு வருவது பற்றி உறுதி அளித்த நிலையில், அரசியலுக்கு வரப்போவது போன்று பல வருடங்களாக கூறி வரும் தங்கள் தலைவர் இன்னும் அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அறிவிக்கவில்லையே என்று ரஜினியின் ரசிகர்கள் பீல் பண்ணினார்கள்.
இந்த நிலையில், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி ரஜினி தரப்பில் இருந்து அரசியல் குறித்த நல்ல சேதி வரும் என்று தற்போது ரஜினி வட்டாரத்தில் இருந்து நம்பிக்கையான செய்திகள் வெளியாகியுள்ளதாம். முக்கியமாக தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கும் ரஜினி, அன்றைய தினம் அரசியல் பிரவேசம் குறித்த உறுதியான தகவலையும் தெரிவிக்கிறாராம். இந்த சேதி வெளியானதில் இருந்து ரஜினி ரசிகர்கள் சுறுசுறுப்பாகி உள்ளனர். அதோடு ரஜியின் மன்றங்களிலும் தற்போது பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.