ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்தார். அதையடுத்து தமிழ், மலையாளத்தில் அவர் நடித்த சோலோ படம் வெளியானது. இந்த நிலையில், தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் மகாநதி படத்தில் ஜெமினிகணேசன் வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், 2015ல் மலையாளத்தில் துல்கர் சல்மான் - சாய் பல்லவி இணைந்து நடித்த காளி படம் தற்போது தெலுங்கில் டப்பிங் செய்யப் பட்டுள்ளது. ஹே பில்லகடா என்ற பெயரில் நவம்பர் 17-ந்தேதி இந்த படம் வெளியாகிறது. இப்பட நாயகியான சாய் பல்லவி, ஏற்கனவே பிடா படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி விட்ட நிலையில், இந்த ஹே பில்லகடா படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் துல்கர்சல்மான்.