இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த ஆகஸ்ட் மாதம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் ரெட்டி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் தேவனகொண்டா, ஷாலினி பாண்டே நடித்தனர். ரதன் இசை அமைத்திருந்தார், ராஜு தோட்டா ஒளிப்பதிவு செய்திருந்தார்.
காதல், படிப்பு இரண்டிலும் தோல்வி அடைந்த ஒருவனை அதிலிருந்து ஒரு பெண் மீட்பதான கதை. சதாரண கதை என்றாலும், அது சொல்லப்பட்ட திரைக்கதைக்காக வெற்றி பெற்ற படம்.
இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. பாலா இயக்குகிறார். விக்ரம் மகன் துருவ் சினிமாவில் அறிமுகமாகிறார். விஜய் தேவரகொண்டா நடித்த கேரக்டரில் துருவ் நடிக்கிறார்.
படத்துக்கு வர்மா என்று தலைப்பு வைக்கப்பட்டு அதன் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
பாலாவின் வர்மா என்பதை தவிர வேறு எதுவும் அறிவிக்கப்படவில்லை. சேது மூலம் விக்ரமின் வாழ்க்கையை உயர்த்திய பாலா, வர்மா மூலம் துருவ் சினிமா வாழ்க்கையை தொடங்கி வைக்கிறார்.