ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அரசியல் கட்சி துவங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றார். விழா துவங்குவதற்கு முன்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
முன்னதாக கோல்கட்டா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், மேற்கு வங்க மாநிலம் எனக்கு பிடித்த ஊர், மம்தாவின் தீவிர ரசிகனும் கூட நான். இங்கு சினிமா விழாவிற்கே வந்தேன், அரசியல் தொடர்பான விஷயங்களுக்கு அல்ல என்றார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த கமல், இப்போது மேற்கு வங்க முதல்வரையும் சந்தித்து பேசி உள்ளார்.