'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோவாவில் வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை 48வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெற உள்ளது. இதில் திரையிடப்படுவதற்காக 26 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 9 மராத்தி மொழித் திரைப்படங்களும், 6 ஹிந்தித் திரைப்படங்களும், தெலுங்கிலிருந்து 'பாகுபலி 2', தமிழிலிருந்து 'மனுசங்கடா' ஆகியவையும் இதற்காகத் தேர்வாகியுள்ளன.
கன்னடம், கொங்கனி, அசாமி, மலையாளம், ஒரியா ஆகிய மொழிகளிலிருந்தும் படங்கள் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழில் தேர்வாகியுள்ள 'மனுசங்கடா' படத்தை அம்ஷன் குமார் இயக்கியுள்ளார். இந்தப் படம் இதற்கு முன்பு மும்பை திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளது.
90 நிமிடம் ஓடக் கூடிய இந்தப் படம் ஒரு தலித் இளைஞரைப் பற்றியக் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. அம்ஷன் குமார் இதற்கு முன இயக்கிய 'ஒருத்தி' திரைப்படம் 2003ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இந்தத் திரைப்பட விழாவில் பிரதானத் திரைப்படங்களிலிருந்து 6 திரைப்படங்கள் திரையிடத் தேர்வாகியுள்ளன. இந்தப் பிரிவில்தான் 'பாகுபலி 2' படமும் இடம் பெற்றுள்ளது. மேலும் “ஜாலி எல்எல்பி 2 (ஹிந்தி), வென்டிலேட்டர் (மராத்தி), பூர்ணா (ஹிந்தி), மேக்னாட் போத் ரகஸ்யா (பெங்காலி) ஆகிய படங்களும் இந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ளன.