Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா படத்தை பிரமோஷன் செய்யும் விக்னேஷ் சிவன்

10 நவ, 2017 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Vignesh-sivan-promoting-Nayanthara-movie

நயன்தாராவின் மானேஜர் ராஜேஷ் தயாரிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அறம் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை நயன்தாரா இதற்கு முன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படங்களைக் காட்டிலும் குறைவாக பிரமோஷன் செய்துள்ளனர். அதனால், படத்திற்குப் பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கவில்லை.

இப்போதைக்கு செலவில்லாத விளம்பரமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் மூலம் படத்தை பிரமோஷன் செய்ய நயன்தாராவின் அன்புக்குரியவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் முயற்சித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே அவர் அறம் படத்தைப் பற்றி அவருடைய டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டும், ரிடுவீட் செய்தும் வருகிறார். யாராவது ஒருவர் அறம் என எழுதினால் கூட உடனே அதையும் ரிடுவீட் செய்யும் அளவிற்கு தீவிரமாக இருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. அவருடைய மானேஜர் தயாரிக்கும் படம், கதாநாயகியாக நடிக்கும் படத்திற்குக் கூட அவர் பேட்டி கொடுக்க வர மறுப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தப் படத்தைக் கூட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதுள்ள கோபத்தில்தான் அவர் நடித்துக் கொடுத்துள்ளார். கத்தி பட விவகாரத்தில் முருகதாஸ் மீது கதைத் திருட்டு புகார் கொடுத்தவர் தான் அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினார். அதனால் தான் பத்திரிகையாளர் சந்திப்பிலும் நயன்தாராவை புகழோ புகழ் என்று புகழ்ந்தார் கோபி நயினார்.

விக்னேஷ் சிவன் அவர் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தைக் கூட இப்படி பிரமோஷன் செய்வாரா என்பது ஆச்சரியம்தான். நயன்தாரா பிரமோஷன் செய்யாத குறையை அவர் தீர்த்துக் கொள்கிறார் போலும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in