Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லட்சுமி - கள்ளக் காதல் குறும்படத்தில் பாரதியார் பாடலா ?, வலுக்கும் எதிர்ப்பு

10 நவ, 2017 - 15:51 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-Bharathiyar-Song-in-Lakshmi-shortfilm

இணைய உலகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் அதன் மூலம் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் பல்வேறு விதமான தகவல்கள் அதைப் பயன்படுத்துவோரை சென்றடைகின்றன. யு டியூபில் இப்படி எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் பல ஆபாச வீடியோக்கள் இளைஞர்கள் மனதைக் கெடுக்கும் விதத்தில் குவிந்து கிடக்கின்றன. அவற்றிற்கு கட்டுப்பாடுகள் வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

சமீப காலமாக வெப் சீரிஸ் என்பது பரவி வருகிறது. பல முக்கிய பட நிறுவனங்களும் அப்படிப்பட்ட வெப் தொடர்களைத் தயாரித்து யு டியூபில் வெளியிட்டு வருகின்றன. பல குறும் படங்களையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றன.

இயக்குனர் கௌதம் மேனனின் யு டியூப் கணக்கான ஒன்றாக என்டர்டெயின்மென்ட்டில் இப்போது வெளியிடப்பட்டுள்ள லட்சுமி என்ற குறும்படம் தற்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கணவன், ஒரு பெண் தோழியை வைத்திருப்பதால் அவனது மனைவியும், ஒரு ஆண் நண்பருடன் பழகி, அவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வது போல படமாக்கப்பட்டுள்ளது.

இந்த குறும்படத்தில் பாரதியாரின் பாடலைப் பயன்படுத்தியிருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதியார் எப்போது கள்ளக் காதலை ஆதரித்துள்ளார் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

கணவன், மனைவியின் அந்தரங்கக் காட்சிகளும் இடம் பெற்றுள்ள அந்தக் குறும்படத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட குறும்படங்களுக்கு சென்சார் அவசியம் என்றும் பலர் வற்புறுத்தி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in