ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ள படம் தீரன் அதிகாரம் ஒன்று. ரகுல்பிரீத்சிங் நாயகியாக நடிதுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கில் காக்கி என்ற பெயரில் தமிழைப்போலவே வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. மேலும், தோழா படத்திற்கு பிறகு தெலுங்கிலும் கார்த்திக்கு ஒரு ரசிகர் வட்டம் உருவாகியிருக்கிறது.
அதனால் காக்கி படத்தின் டீசர், டிரைலர் என வெளியானபோது அங்குள்ள ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதேபோல் காக்கி பட பாடல்களும் தெலுங்கில் ஹிட்டடித்த விட்டது. குறிப்பாக, அந்த படத்தில் இடம்பெற்றுள்ள அடுகே பிடுகே அத்தேடே கோடுகா, சின்னி சின்னி ஆஸலேவோ, டிங்கா டிங்கா ஆகிய பாடல்கள் ஹிட்டாகி விட்டதாம். அதனால் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு தமிழில் எதிர்பார்ப்பு இருப்பது போன்று காக்கி படத்திற்கு தெலுங்கிலும் வரவேற்பு ஏற்பட்டுள்ளதாம்.