வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ்த் திரையுலகில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நமீதா. தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். கிளாமராக நடித்து அவருக்கென்று ரசிகர்களிடத்திலும், தமிழ் சினிமாவிலும் அவருக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் டிவியில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தற்போது தமிழில் பொட்டு என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வரும் நமீதா வரும் 24ம் தேதியன்று திருமணம் செய்து கொள்ள உள்ளார். நமீதா தனது நீண்டகால நண்பரான வீராந்திராவை மணக்க உள்ளார்.
இது பற்றிய அறிவிப்பு நமீதா தரப்பிலிருந்து இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவுடன் கலந்து கொண்ட ரைசா அவருடைய டுவிட்டரில் ஒரு வீடியோ மூலம் இதைத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் நமீதாவும் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நமீதாவின் திருமணம் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடாமல் ரைசா வெளியிட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இதன் பிறகு நமீதா தரப்பிலிருந்து அறிவிப்பு வந்தாலும் வரலாம்.