தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்தவர் அஞ்சலி. அதையடுத்து எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் ஜெய்யுடன் நடித்தார். தற்போது பலூன் படத்தில் மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். ஹாரர் காமெடி கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெய்-அஞ்சலி ஜோடியுடன் ஜனனி அய்யரும் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த படம், கடந்த செப்டம்பர் 27-ம் தேதியே வெளியாக இருந்தது. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நாயகனாக நடித்த ஸ்பைடர் படம் அப்போது திரைக்கு வந்ததால் தியேட்டர் பிரச்சினையால் பின்வாங்கியது பலூன். இந்த நிலையில், தற்போது நியூ இயர் ஸ்பெசலாக டிசம்பர் 29-ந் தேதி பலூன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.